الكافرون Al-Kaafiroon
(1) (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
(2) நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
(3) இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
(4) அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
(5) மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
(6) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
النصر An-Nasr
(1) அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(2) மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(3) உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
المسد Al-Masad
(1) அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
(2) அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
(3) விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
(4) விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
(5) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).