العصر Al-Asr
(1) காலத்தின் மீது சத்தியமாக.
(2) நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
(3) ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
الهمزة Al-Humaza
(1) குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(2) (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
(3) நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
(4) அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
(5) ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
(6) அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
(7) அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
(8) நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
(9) நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
الفيل Al-Fil
(1) (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(2) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
(3) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
(4) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
(5) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.