الإخلاص   سورة  : Al-Ikhlaas


سورة Sura   الإخلاص   Al-Ikhlaas
الصفحة Page 604
الإخلاص Al-Ikhlaas
(1) (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(2) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(3) அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
(4) அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
الفلق Al-Falaq
(1) (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
(2) அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
(3) இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
(4) இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
(5) பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
الناس An-Naas
(1) (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
(2) (அவனே) மனிதர்களின் அரசன்;
(3) (அவனே) மனிதர்களின் நாயன்.
(4) பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
(5) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
(6) (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022