الشعراء   سورة  : Ash-Shu'araa


سورة Sura   الشعراء   Ash-Shu'araa
وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ (84) وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ (85) وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ (86) وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ (87) يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ (89) وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ (90) وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ (91) وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ (92) مِن دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ (93) فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ (94) وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ (95) قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ (96) تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ (97) إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ (98) وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ (99) فَمَا لَنَا مِن شَافِعِينَ (100) وَلَا صَدِيقٍ حَمِيمٍ (101) فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ (102) إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ (103) وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ (104) كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ (105) إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ (106) إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ (107) فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (108) وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ (109) فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (110) ۞ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ (111)
الصفحة Page 371
(84) "இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!"
(85) "இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"
(86) "என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்."
(87) "இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!"
(88) "அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா."
(89) "எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."
(90) "பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்."
(91) "வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்."
(92) "இன்னும், அவர்களிடம் கூறப்படும்; "நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?" என்று.
(93) "அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,"
(94) பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
(95) "இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்)."
(96) அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்;
(97) "அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்."
(98) "உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது)
(99) இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
(100) ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
(101) அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
(102) நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.)
(103) நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
(104) மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கிறான்.
(105) நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
(106) அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது "நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?"
(107) நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
(108) ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கு வழிபடுங்கள்.
(109) இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
(110) ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிபடுங்கள் (என்று நூஹ் கூறியபோது),
(111) அவர்கள்; "தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா," என்று கூறினார்கள்.
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022