الإسراء   سورة  : Al-Israa


سورة Sura   الإسراء   Al-Israa
ذَٰلِكَ مِمَّا أَوْحَىٰ إِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتُلْقَىٰ فِي جَهَنَّمَ مَلُومًا مَّدْحُورًا (39) أَفَأَصْفَاكُمْ رَبُّكُم بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا (40) وَلَقَدْ صَرَّفْنَا فِي هَٰذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا (41) قُل لَّوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَّابْتَغَوْا إِلَىٰ ذِي الْعَرْشِ سَبِيلًا (42) سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا (43) تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (44) وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا (45) وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَىٰ أَدْبَارِهِمْ نُفُورًا (46) نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰ إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا (47) انظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48) وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا (49)
الصفحة Page 286
(39) இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
(40) (முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
(41) இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
(42) (நபியே!) நீர் சொல்வீராக அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று
(43) அவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
(44) ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
(45) (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
(46) இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
(47) (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
(48) (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகை உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
(49) இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022