(30) அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்களை செய்கைகளை நன்கறிகிறான்.
(31) அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
(32) நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கன்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
(33) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
(34) நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
(35) (முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
(36) திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
(37) அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான்.
(38) அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.