(35) "எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
(36) "சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
(37) "குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
(38) ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
(39) நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
(40) நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
(41) இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
(42) (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
(43) அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
(44) அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
(45) அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
(46) பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(47) அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
(48) ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
(49) ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
(50) அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
(51) மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
(52) ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
المعارج Al-Ma'aarij
(1) (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
(2) காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
(3) (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
(4) ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
(5) எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
(6) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
(7) ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(8) வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
(9) இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
(10) (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.