(16) இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தானம் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
(17) திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
(18) வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
(19) (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறாhகளோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தரைகளின் மேல் ஊற்றப்படும்.
(20) அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
(21) இன்னும் அவர்களுக்கு இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
(22) (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் பேதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, "எரிக்கும் வேதனையைச் சவையுங்கள்" (என்று சொல்லப்படும்).
(23) ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.