الشعراء   سورة  : Ash-Shu'araa


سورة Sura   الشعراء   Ash-Shu'araa
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ (160) إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ (161) إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ (162) فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (163) وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ (164) أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ (165) وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ (166) قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ (167) قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ الْقَالِينَ (168) رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ (169) فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ (170) إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ (171) ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ (172) وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ (173) إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ (174) وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ (175) كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ (176) إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ (177) إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ (178) فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (179) وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ (180) ۞ أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ (181) وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ (182) وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (183)
الصفحة Page 374
(160) அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது,
(161) "நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
(162) "ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
(163) "மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவிலலை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
(164) "உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
(165) "இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்."
(166) அதற்கவர்கள்; "லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்" எனக் கூறினர்.
(167) அவர் கூறினார்; "நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
(168) "என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!" (எனப் பிரார்த்தித்தார்.)
(169) அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
(170) (அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
(171) பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
(172) இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
(173) நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
(174) மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
(175) தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
(176) ஷுஐப் அவர்களிடம்; "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது
(177) "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
(178) "ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
(179) "மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
(180) "அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
(181) "நேரான தாராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
(182) "மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
(183) "அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சங்கள்" (எனக் கூறினார்.)
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022