(112) அவர் கூறினார்; அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
(113) நீங்கள் அறிய்ககூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம் தான் இருக்கிறது.
(114) முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
(115) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
(116) அதற்கவர்கள் கூறினார்கள்; "நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்" என்று கூறினார்கள்.
(117) அவர் கூறினார்; "என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
(118) ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)
(119) ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
(120) அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
(121) நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
(122) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(123) ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
(124) அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது
(125) "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
(126) "மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
(127) "நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
(128) இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
(129) "இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
(130) "எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
(131) "மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
(132) "அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
(133) "இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
(134) "நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" (எனக் கூறினார்).
(135) (இதற்கு) அவர்கள்; "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள்.
(136) "இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.